பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஆலைகள் செயல்பட எதிர்ப்பு – ஈரோடு ஆட்சியரிடம் மனு!

 

பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஆலைகள் செயல்பட எதிர்ப்பு – ஈரோடு ஆட்சியரிடம் மனு!

ஈரோடு

பெருந்துறை சிப்காட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சிப்காட்டினால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி, நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.

அந்த மனுவில், தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பெருந்துறை சிப்காட்டில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும், அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் கடை வீதிகளில் சுற்றித்திரிவதால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஆலைகள் செயல்பட எதிர்ப்பு – ஈரோடு ஆட்சியரிடம் மனு!

தமிழக அரசின் அறிவிப்பின் படி, சிப்காட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலை மற்றும் கேஸ் ஃபில்லிங் தொழிற்சாலை தவிர்த்து, டையிங், டெக்ஸ்டைல்ஸ், பனியன், கெமிக்கல், டியூப், அலுமினிய தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு ஊரடங்குக்குப் பின் இயக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், இதனால், வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்றும், அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்