darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



ஃபிரெண்டுன்னு நம்பி சொன்னதால் விபரீதம்... மறுமணம் செய்ய இருந்த டீச்சரை கடத்தியவர்கள் கைது!

மாதிரி படம்
மாதிரி படம்

மறுமணம் செய்ய இருந்த 43 வயது டீச்சரை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் சசிகலா (43). பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் விவாகரத்து கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய பள்ளி தோழர் ஆசாத்தை சந்தித்துள்ளார் சசிகலா. அப்போது தன்னுடைய குடும்ப சூழல், விவாகரத்து என எல்லாவற்றையும் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இதனால், ஆசாத்தின் மனதில் பரிவு ஏற்பட்டு, சசிகலாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
தனிமையில் உள்ள சசிகலாவுக்கும் ஆசாத்தைப் பிடித்திருந்தது. இதனால், திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் மணிக் கணக்கில் பேசியுள்ளனர். நேரில், மொபைல் போனில் என்று இரண்டு வாரங்களுக்கு மேலாக பேச்சு நீடித்துள்ளது. திடீரென்று சசிகலாவுடன் பேசுவதை ஆசாத் நிறுத்திவிட்டார். அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. இதனால் என்ன ஆனது என்று தெரியாமல் சசிகலா குழம்பிப்போனார்.

criminals

அப்போது, ஆசாத்தின் நண்பர் என்று ஒருவர் சசிகலாவுக்கு போன் செய்துள்ளார். ஆசாத் தற்போது குழப்பமான மனநிலையில் உள்ளதாகவும், தனக்கு ஒரு லட்ச ரூபாய் தந்தால் இருவரையும் சேர்த்து வைப்பதாகவும் கூறியுள்ளார். இதை சசிகலாவும் ஏற்றுக்கொண்டு ஒரு லட்ச ரூபாயுடன் காத்திருந்தார். ஆனால் பணத்தை நேரில் வந்து பெற்றுக்கொள்ளாமல், ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு கொண்டுவரும்படி கூறியுள்ளார் ஆசாத்தின் நண்பர்.
சசிகலாவும் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கு சென்றுள்ளார். காரில் வந்த அந்த நபர், ஆசாத் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி வண்டியில் ஏற்றியுள்ளார். ஆனால், ஆசாத் இருக்கும் இடத்துக்குச் செல்லாமல் வண்டி நீண்ட தூரம் சென்றது. இதனால், சந்தேகம் அடைந்த சசிகலா கூச்சல் போட்டுள்ளார். கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிய அந்த நபர், சசிகலாவிடமிருந்த பணத்தையும் பிடுங்கிக்கொண்டார். உயிரோடு வீடு திரும்ப வேண்டும் என்றால் இன்னும் பணம் வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். இரண்டு நாட்கள் காரிலேயே சுற்றியிருக்கிறார்கள். கார் ஒரு இடத்தில் நின்றபோது, அங்கிருந்து தப்பி போலீஸ் நிலையம் சென்றார் சசிகலா.

arrested

உடனடியாக காரில் சசிகலாவை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஆசாத்தை பிடித்து வந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஆசாத்தின் நெருங்கிய நண்பர்கள் என்பதும், சசிகலாவுடன் திருமணம் பற்றி ஆசாத் அவர்களிடம் கூறியதாகவும், இருவருக்கும் இடையே உள்ள குழப்பத்தை பயன்படுத்தி அவர்கள் பணம் பறிக்கத் திட்டமிட்டதும் தெரியவந்தது. இந்த கடத்தல் பற்றி ஆசாத்துக்கு எதுவும் தெரியாது என்பதால் அவரை விடுதலை செய்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.