• November
    13
    Wednesday

Main Area

Main



ஏழரை நாட்டு சனியை 8 கோடி ரூபாய் குடுத்து யாராவது வாங்குவாங்களா? வாங்கிருக்கான் ஒருத்தன்!

Persistence of Chaos
Persistence of Chaos

Persistence of Chaos அப்டீங்கிறது ஒரு லேப்டாப்போட பேரு. "நித்ய கண்டம் பூரண சனி"ன்னு இதனை தமிழ்ப்படுத்தலாம். அந்தளவுக்கு வில்லங்கம் புடிச்ச லேப்டாப் அது. ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல, ஆறு வில்லங்கம் அந்த லேப்டாப்பில் இருக்கிறது. வம்பை விலைகுடுத்து வாங்குறது உங்களுக்கு புடிக்கும்னா, இந்த லேப்டாப்பை வாங்கலாம். "ஆங், நாங்க பாக்காத வம்பா, அப்புடி என்னா பெரிய வம்பு வந்துடபோகுது ஒரு லேப்டாப்பால"ன்னு அசாதாரணமா நினைக்க வேண்டாம். இந்த லேப்டாப்பில் 6 வைரஸ்களை லோட் பண்ணி வைத்திருக்கிறார்கள். நல்லா தெளிவா சொல்லுப்பா, வைரஸ்ஸா இல்ல ஆண்ட்டிவைரஸ்ஸா? தெளிவா சொல்றோம் கேட்டுக்கங்க. வைரஸ் மட்டுமே.

Persistence of Chaos

இந்த ஆறு வைரஸ்களும் ஒண்ணுக்கொண்ணு சளைச்சதில்ல. இந்த ஆறு வைரஸ்ஸும் தனித்தனியா ஏற்படுத்துன சேதாரத்தோட அளவு ஏழு லட்சம் கோடி ரூபாய். அதாவது, 7,000,000,000,000 கோடி ரூபாய். இந்த ஆறு வைரஸ்களும் அவை ஏற்படுத்தின சேதாரங்களையும் கொஞ்சம் பாருங்க.

ஐ லவ் யூ (ILOVEYOU) 38 ஆயிரம் கோடி ரூபாய், மை டூம் (MyDoom) 2.64 லட்சம் கோடி ரூபாய், சோ பிக் (SoBig) 2.57 லட்சம் கோடி ரூபாய், வான்னா கிரை (WannaCry) 28 ஆயிரம் கோடிரூபாய், டார்க் டக்கீலா (Dark Tequila) வங்கிக்கணக்குகளை வேவு பார்த்தன்மூலம் ஏற்படுத்தின நஷ்டம், பிளேக் எனர்ஜி (Black Energy) ஃபைல்களை என்கிரிப்ட் செய்து ஏற்படுத்தின நஷ்டம் என எல்லாம் சேர்ந்து 7 லட்சம் கோடிவரை இழப்பை ஏற்படுத்தின வைரஸ்கள் இவை.

Telecast of Persistence of Chaos

ஒரு வேலையத்தவன் இந்த 6 வைரஸ்களையும் ஒரு லாப்டாப்பில் வைத்து, அதனை இணையதளம் மூலமாக ஏலம்விட்டிருக்கிறான். ஏலத்துக்கு வைத்ததுகூட பிரச்னையில்லை, அந்த லேப்டாப்பை தனியறையில் வைத்து அதனை லைவ்வாக ஒளிபரப்பி, அதற்கான அடிப்படை விலையாக எட்டு கோடி ரூபாயை நிர்ணயித்திருக்கிறான். கொடுமை என்னன்னா, அதனையும் ஒருவன் எட்டு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறான்.

2018 TopTamilNews. All rights reserved.