நாளை முதல் கொடைக்கானலைச் சுற்றி பார்க்க அனுமதி!

நாளை முதல் கொடைக்கானலைச் சுற்றி பார்க்க அனுமதி!

கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க நாளை முதல் அனுமதி வழங்கப்படுகிறது.

கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதையடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பிய நிலையில் தொடர்ந்து கடற்கரை, சுற்றுலா தலங்களுக்கு தடை தொடர்கிறது.

நாளை முதல் கொடைக்கானலைச் சுற்றி பார்க்க அனுமதி!

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

நாளை முதல் கொடைக்கானலைச் சுற்றி பார்க்க அனுமதி!

இந்நிலையில் நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க அனுமதி அளித்து ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். வெளி மாவட்ட பயணிகள் இபாஸ் பெறுவது கட்டாயம் என்று கூறியுள்ள நிலையில் உள் மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா போன்றவை திறக்கப்படுகின்றன.