ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தங்கத்தேர் இழுக்க அனுமதி!

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தங்கத்தேர் இழுக்க அனுமதி!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் மூடப்பட்டன. இருப்பினும் நாளை ஆடி மாதம் துவங்க இருப்பதால் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தங்கத்தேர் இழுக்க அனுமதி!

இந்நிலையில் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் வரும் 24 ஆம் தேதி தங்கத்தேர் இழுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்றி தங்கத்தேர் இழுக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதியளித்துள்ளார்.

நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா 9 நாள் ஆடிப்பூர திருவிழாவை பக்தர்களின்றி அர்ச்சகர்கள் மட்டும் நடத்தலாம் என்றும் கொடியேற்றம் மற்றும் தங்கத்தேரோட்டம் யூடியூப்பில் வெளியிடப்படும் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.