ஏசி வசதி இல்லாத பார்களை திறக்க அனுமதி கொடுக்க வேண்டும்- தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

ஏசி வசதி இல்லாத பார்களை திறக்க அனுமதி கொடுக்க வேண்டும்- தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

பல நாட்களாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட்ட போது, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படாததால் 8 ஆம் தேதி டாஸ்மாக்கை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 45 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் இரண்டே நாட்களில் மூடப்பட்டது குடிமகன்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்பது தொடர்பாக மேல்முறையீடு செய்த நிலையில், டாஸ்மாக்குக்கு எதிரான தடை நீக்கப்பட்டது. அதன் படி தமிழகத்தில் எல்லா இடங்களிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டன.

ஏசி வசதி இல்லாத பார்களை திறக்க அனுமதி கொடுக்க வேண்டும்- தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

மது இல்லாமல் ஏங்கிக் கிடந்த குடிமகன்களுக்காகவும் அரசின் வருமானத்திற்காகவும் அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு மேட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பார்கள் உள்ளிட்ட மதுபான கடைகளுக்கு இன்னும் அளிக்கப்படவில்லை. அதனால், ஏசி வசதி இல்லாத பார்களை திறக்க மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பார்களுக்கும் அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.