விஜயதசமி அன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கல்வித்துறை அனுமதி!

 

விஜயதசமி அன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கல்வித்துறை அனுமதி!

விஜயதசமி நாளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில், வரும் 26-ம் தேதி விஜயதசமி நாளன்று அரசுப் பள்ளிகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமி அன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கல்வித்துறை அனுமதி!

அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகள், பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து சேர்க்கையை மேற்கொள்ள அனைத்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் நாளிலேயே அவர்களுக்கான பாடப்புத்தகங்களை வழங்கிடவும், விஜயதசமி நாளை முன்னிட்டு நடத்தப்படும் மாணவர் சேர்க்கையை கண்காணிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்