புதுச்சேரியில் திரையரங்குகளுக்கு அனுமதி – மதுபார்கள் இயங்கவும் அனுமதி

புதுச்சேரியில் திரையரங்குகளுக்கு அனுமதி – மதுபார்கள் இயங்கவும் அனுமதி

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இன்றுடன் ஊரடங்கு நீட்டிப்பு முடிவடையும் நிலையில், நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி காலை 6 மணி வரைக்கும் ஊரடங்கினை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இந்த ஊரடங்கு நீட்டிப்பில் புதிய தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

புதுச்சேரியில் திரையரங்குகளுக்கு அனுமதி – மதுபார்கள் இயங்கவும் அனுமதி

அதனால் தமிழகத்தில் திரையரங்குகள், மது பார்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. மேலும், கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளதால் மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நெரிசல் மிகுந்த சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் திரையரங்குகளுக்கு அனுமதி – மதுபார்கள் இயங்கவும் அனுமதி

தமிழகத்தில் நிலை இவ்வாறிருக்க, கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கினை வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது புதுச்சேரி அரசு.

கூடுதல் தளர்வாக இரவு 9 மணி வரைக்கும் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மதுபான பார்களும் 50 சதவிகித நபர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மதுபான கடைகளுக்கு அருகில் இருக்கும் பார்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் திரையரங்குகளுக்கு அனுமதி – மதுபார்கள் இயங்கவும் அனுமதி

சுற்றுலா தலங்களிலும்50 சதவிகிதம் பேர் வர அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் 100 சதவிகிதம் பேருடன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.