• February
    29
    Saturday

Main Area

Main



பெரியாருக்கு வேட்டு... காந்தி செய்த தீட்டு... அதிர வைக்கும் நல்லகண்ணு..!

நல்லகண்ணு
நல்லகண்ணு

பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு விடம் பெரியாரை பற்றி ரஜினி கூறிய கருத்து குறித்து கேட்ட போது, ’’பெரியார் அவர்கள் கள்ளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தன் தோட்டத்தில் இருந்த 700 தென்னை மரங்களை வெட்டினார். நான்கு வர்ணங்களாக சமூகத்தை கூறுபவர்களை கடுமையாக சாடினார்.  கேரளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த கொடுமையை எதிர்த்து அவர்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றதால் அன்றைய அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

அந்த கைது நடந்ததால் வைக்கம் வீரர் என்று பெரியார் சிறப்பு பெற்றார். இறைநம்பிக்கை தவறு என்பதை விட அதில் உள்ள மூட நம்பிக்கையைத் தான் அவர் கடுமையாகச் சாடினார். பெண்களுக்கு சம உரிமை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்தவர் பெரியார். இன்றைக்கு நமது சந்ததியினர் நன்கு படித்து முன்னுக்கு வந்து வேலைவாய்ப்புகள் உயர்பதவிகளில் இருப்பதற்கு அவரது 80 ஆண்டுகால போராட்டம் தான் காரணம்.

periyar

இப்படிப்பட்ட சமூக நீதிப் போராளி பகுத்தறிவு பிரச்சாரத்திற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரியார் மீது மதவாதத்தின் மூலம் யாரவது ஒரு செய்தாலும் அது எடுபடாது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அவரது கொள்கையின் தாக்கம் இருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு முறை காந்தியடிகள் ஒரு ஆற்றில் இறங்கி குளித்த போது அவர் அருகில் குளித்ததால் தீட்டு ஒட்டிக்கொள்ளும் என கொஞ்ச தூரம் தள்ளிச் சென்று குளித்தவர்கள் தான் இன்று பெரியாரை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று அவர் கூறினார்.
 

2018 TopTamilNews. All rights reserved.