“பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

“பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார் . இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார் என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமூகநீதி கதவைத் திறந்தது பெரியாரின் கைத்தடி; தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் சமூகநீதி இருப்பதற்கு காரணம் பெரியாரின் அடித்தளம் தான். யாரும் எழுதத் தயங்கியதை எழுதியவர்; யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது.

“பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

பெரியாரின் போராட்டம் குறித்து பேசுவது என்றால் அவை பத்து நாட்கள் ஒத்தி வைத்துவிட்டு தான் பேச வேண்டும் . சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்புதான் பெரியாரின் இலக்கு; அவர் உருவாக்கிய பகுத்தறிவு கூர்மையால் தமிழினம் சிந்தனை பெற்றது. எனவே பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும். செப்டம்பர் 17 சமூக நீதி நாள் அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உதறித் தள்ளுவோம்; பெண்களை சரிசமாக கருதுவோம் என்ற உறுதிமொழி எடுக்கப்படும்” என்றார்.