தந்தை பெரியார் பிறந்தநாள் – சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு அமோக வரவேற்பு!

 

தந்தை பெரியார் பிறந்தநாள் – சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு அமோக வரவேற்பு!

தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவிக்க வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் பிறந்தநாள் – சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு அமோக வரவேற்பு!

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!1987-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் நாள் தான் சமூக நீதி கேட்டு ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தை தொடங்கினோம். அந்த நாளில் தான் சமூக நீதிக்காக போராடிய மாவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை செப்டம்பர் 17-ஆம் நாள் தான் சமூக நீதி நாள். 33 ஆண்டுகளாக செப்டம்பர் 17-ஆம் நாளை சமூகநீதி நாளாக கடைபிடித்து வருகிறோம். அந்த நாளில் சமூக நீதி மாநாடு நடத்தினோம். கடந்த ஆண்டு அதே நாளில் தான் ’சுக்கா… மிளகா… சமூகநீதி’ நூல் வெளியிடப்பட்டது!தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் வாக்குறுதி அளித்து வந்தது. பா.ம.க. சமூகநீதி நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி!” என்று பதிவிட்டுள்ளார்.

தந்தை பெரியார் பிறந்தநாள் – சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு அமோக வரவேற்பு!

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன், “திமுக அரசு சமூகநீதி அரசு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் சட்டப்பேரவையில் செய்துள்ள அறிவிப்பு அமைந்துள்ளது. சமூகநீதியின் பாதுகாவலர் பெரியாரின் பிறந்தநாளான செப்-17ஐ சமூகநீதி நாள் என அறிவித்திருப்பதை பாராட்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.அதேபோல் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ” கலைஞரின் அதே சுயமரியாதை உணர்வு முதலமைச்சர் இந்த அறிவிப்பை வாசிக்கும்போது தெரிந்தது. திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது ; துரோகி தோன்றினால்தான் அழிக்க முடியும்; அதுவும் தோன்ற முடியாது” என்றார்.