“தமிழ்ச் சமுதாயத்துக்கு பேரிழப்பு” – பெரியாரின் தொண்டர் மறைவு!

 

“தமிழ்ச் சமுதாயத்துக்கு பேரிழப்பு” – பெரியாரின் தொண்டர் மறைவு!

பெரியாரின் தொண்டர் வே.ஆனைமுத்து (96) இன்று புதுச்சேரியில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை இரும்புலியூரில் உள்ள அவரது இல்லத்தில் நடக்கிறது. இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய நெறியில் தேசிய இன வழிபட்ட சம உரிமையுடைய சமதர்ம குடியரசுகள் ஒருங்கிணைந்த கூட்டாட்சி அமைய வேண்டும் என்பதற்காக மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என்கிற கட்சியை வே.ஆனைமுத்து 40 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கினார்.

“தமிழ்ச் சமுதாயத்துக்கு பேரிழப்பு” – பெரியாரின் தொண்டர் மறைவு!

சிறுவயதிலிருந்தே பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்ட பிறகு அவரது தொண்டனாக மாறினார். பத்திரிகையாளராகவும் இருந்த ஆனைமுத்து தனது எழுத்தின் மூலம் பெரியாரின் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். பெரியார் குறித்தும், அவரது சமூகநீதி சிந்தனைகளை குறித்தும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

“தமிழ்ச் சமுதாயத்துக்கு பேரிழப்பு” – பெரியாரின் தொண்டர் மறைவு!

ஆரம்பத்தில் திராவிடர் கழகத்திலிருந்த அவர் கருத்து வேறுபாடு காரணமாக 1975ஆம் ஆண்டு விலகினார். அதன்பின் பெரியார் சம உரிமைக் கழகம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1988ஆம் ஆண்டு அமைப்பின் பெயரை மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என பெயர் மாற்றம் செய்தார். ஆனைமுத்து மகனிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

“தமிழ்ச் சமுதாயத்துக்கு பேரிழப்பு” – பெரியாரின் தொண்டர் மறைவு!

அதன்பின் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பெரியார் கொள்கையை நெஞ்சில் ஏந்தி, பகுத்தறிவு – சமூக நீதிப் பாதையில் பயணித்து, முதுமையிலும் பொதுத் தொண்டாற்றிய மார்க்சிய – பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்துவின் மறைவு திராவிட இயக்கத்திற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்த அய்யாவின் பெரும்பணியும், சிந்தனையாளன் என்ற சீரிய இதழ் வாயிலாக அவர் வழங்கிய கருத்துகளும் என்றும் நிலைத்திருக்கும். பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்துவின் மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.