• April
    05
    Sunday

Main Area

Main



பிராமணரை எதிர்த்த பெரியார்... ஆலோசகராக வைத்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்! - அன்புமணி தாக்கு

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

பெரியார் பிராமணர்களை எதிர்த்தார் என்றும் ஆனால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிராமணரை தன்னுடைய ஆலோசகராக வைத்துள்ளார் என்றும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழா சென்னை அம்பத்தூரில் நடந்தது. விழாவில் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றுப் பேசினார். 
அப்போது அவர், "காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க கோரிக்கை விடுத்து வந்தது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதனை சட்டமாகக் கொண்டு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

tttn

தி.மு.க-வும் காவிரி டெல்டா மாவட்டங்களை பாகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக் கோரிக்கை வைத்தது. ஆனால், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்திட்டது தி.மு.க-தான். இப்போது அதை எதிர்த்து அவர்களே ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நீட் தேர்வை கொண்டுவந்ததும் தி.மு.க - காங்கிரஸ்தான். கச்சத் தீவை விட்டுக்கொடுத்தது தி.மு.க. தற்போது அதனை மீட்பதாகக் கூறி வருகிறது.பெரியார் பிராமணரை எதிர்த்தார். ஆனால் ஸ்டாலினின் ஆலோசகராக பிராமணர் செயல்படுகிறார். அம்பத்தூர் பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். அதற்கு சரியான இடம் டன்லப் தொழிற்சாலை" என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.