• February
    28
    Friday

Main Area

Main



பெரியார்- இந்துமத விவகாரத்தில் இஸ்லாமியர்கள் மூக்கை நுழைக்காதீர்... ஓங்கும் வேண்டுகோள்..!

பெரியார்
பெரியார்


பெரியார், இந்து மத சர்ச்சைகளில் மாற்று மதத்தினர் தலையிடுவது அவசியமற்றது என அரசியல் விமர்சகர் கிஷோர்கே.சாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’எங்கள் மதம் குறித்து அசிங்கமாக பேசிய ஈ.வே.ரா.,வை இந்துக்களாகிய நாங்கள் எதிர்க்கிறோம், எதிர்வினையாற்றுகிறோம், சம்மந்தமே இல்லாமல் சில இஸ்லாமியர்கள் எதற்காக குறுக்க மறுக்க ஓடிட்டிருக்காங்க?rajini

16.12.1960 ம் தேதி வெளி வந்த நாத்திகன் பத்திரிக்கையில்... ’’இஸ்லாமியர்களை மிகவும் மோசமாக வர்ணித்து ஒரு கட்டுரை தொடர் வெளி வரத் துவங்கியது. "அல்லாவின் தண்டனையில் அலங்கோலம்" என்கிற பெயரில் 3 தொடர்களாக அது வெளி வந்தது. அதை எழுதிய நாத்திகம் இராமசாமி அப்பொழுது ஈவெராவுடன் திராவிடர் கழகத்தில் தான் இருந்தார். 1970 கள் வரை அவர் திராவிடர் கழகத்தில் தான் இருந்தார். ஈவெரா அனுமதியின்றி எந்த கட்டுரையும் நாத்திகன் பத்திரிக்கையில் வந்ததில்லை. நாத்திகன் பத்திரிக்கை திமுகவிற்கே எதிராக காமராஜரை ஆதரித்து கட்டுரைகள் ,வெளியிட்டதும் ஈ.வெ.ரா, காமராஜரை ஆதரித்ததனால் தான்.

periyar

நாத்திகம் இராமசாமி 2009 இல் மறைந்தார். அவர் வீரமணி, மணியம்மை திராவிடர் கழகத்தை 1973 இல் கைப்பற்றிய பொழுது வெளியேற்றப்பட்டார். அப்படி அவர் என்ன தான் ஈ.வே.ரா அனுமதியுடன் எழுதினார்?

16.12.1960 இல் வந்த ஈ.வெ.ரா கும்பல் நடத்திய நாத்திகம் பத்திரிக்கையில், "அல்லாவின் தண்டனையில் அலங்கோலம்" என்கிற பெயரில் ’’அல்லாஹ் ஒரு முட்டாள்... அல்லாஹ் ஒரு கட்டுமராண்டி, அவருக்கு உலகில் இருக்கும் தகுதியில்லை என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் பல விஷயங்களை கூறுகிறார். 06/01/1961 இல் வெளி வந்த நாத்திகம் பத்திரிக்கையிலும் இது தொடர்கிறது. இதையும் இன்று ஈவேராவுக்கு முட்டுக்கொடுக்கும் இஸ்லாமியர்கள் ஏற்கிறார்கள் போலும்’’ என கிஷோர்கே.சாமி தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.