“மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு “… நவீன காலத்திலும் ஓங்கி நிற்கும் பெரியார்

“மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு “… நவீன காலத்திலும் ஓங்கி நிற்கும் பெரியார்

தந்தை ஈவேரா பெரியாரின் 47வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை சமூகத்திற்கும் , சமூக மாற்றத்திற்கும் செலவு செய்து பலர் மனதிலும் என்றும் நீங்கா இடம் பெற்றுக் கொண்டிருப்பவர் தந்தை பெரியார்.

“மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு “… நவீன காலத்திலும் ஓங்கி நிற்கும் பெரியார்

எங்கே விழுந்தாய் என பார்க்கத் தேவையில்லை. எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும் என்ற பெரியாரின் கூற்று இன்றளவும் நம் சமூக சிந்தனையை சீண்டுவதாகவே உள்ளது. மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்ற பெரியார் கூறிய வார்த்தைகள் இன்னும் தமிழினத்திற்கு ஒரு கேடயமாக விளங்குகிறது. தந்தை பெரியார் 1926ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.

“மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு “… நவீன காலத்திலும் ஓங்கி நிற்கும் பெரியார்

நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என இயக்கங்களின் பெயர் மாறினாலும் தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பு, திராவிடர் இன விடுதலை உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. உங்கள் மதம் இன்னொரு மதத்தை உளமாற வெறுக்க கற்றுக் கொடுக்கும் என்றால் ,வேறு மதங்களை நம்புவோர்களையோ ,ஒரு மதத்தையும் நம்பாதவர்களையோ பழிக்கும் என்றால் அப்படி ஒரு மதத்தை பின்பற்றுவதில் வரும் புண்ணியமும் பலனும் எனக்கு வேண்டாம் என்று அடித்து சொன்னவர் பெரியார்.

“மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு “… நவீன காலத்திலும் ஓங்கி நிற்கும் பெரியார்

நான் கூறும் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம், உங்களுக்கு சரி என்று பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தனது கருத்தைப் பிறர் மீது திணிக்காமல் காலம் கடந்தும் வாழ்ந்து மறைந்தவர் இந்தப் பகுத்தறிவு பகலவன். பெண்ணடிமைத்தனம், சாதி ஒழிப்பு, சமூக விடுதலை, பெண் விடுதலை என சீரிய சிந்தனைகளுடன் வலம் வந்த இந்த சிங்கம் மூடநம்பிக்கை பற்றிய தனது கருத்தினை எந்த அச்சமும் இன்றி கர்ஜித்து வந்தது. தனது இறுதி மூச்சுவரை சமூகத்தின் நலனுக்காக பாடுபட்ட பெரியார் 1973 ஆம் ஆண்டு தனது 94வது வயதில் உயிரிழந்தார்.

“மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு “… நவீன காலத்திலும் ஓங்கி நிற்கும் பெரியார்

“செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்” என்பார்கள் . ஆம் கடலூரில் 29. 7.1944 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் மீது செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் 1972இல் அவருக்கு சிலை எழுப்பப்பட்டது.செருப்பு வீசப்பட்ட பெரியாருக்கு மட்டுமல்ல, அதை விட கடுமையாக விமர்சிக்கப்பட்ட அவரின் கொள்கைகள் இன்று சிறப்புடன் அரங்கேறி வருகின்றன. அதிலும் அவை சட்டம் ஆகின்றன என்பது தான் வரலாற்று சிறப்பு… வாழ்க பெரியார்…!!!