100 சதவிகிதம் சரியான நேரத்திற்கு ரயில்களை இயக்கி சாதனை! – ஊரடங்கு காலத்தில் இந்தியன் ரயில்வே பெருமிதம்

 

100 சதவிகிதம் சரியான நேரத்திற்கு ரயில்களை இயக்கி சாதனை! – ஊரடங்கு காலத்தில் இந்தியன் ரயில்வே பெருமிதம்

இந்திய ரயில்வே 100 சதவிகிதம் நேரம் தவறாமையை கடைபிடித்து புதிய சாதனை படைத்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது மிகக் குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே தற்போது ரயில்கள் இயக்கப்படுகிறது. ஜூலை 31ம் தேதி வரை முன்பதிவு செய்த டிக்கெட்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் வட இந்தியாவுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் பல நாட்கள் தாமதமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. மும்பையிலிருந்து உ.பி செல்ல வேண்டிய ரயில், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால் ஒடிஷா வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

100 சதவிகிதம் சரியான நேரத்திற்கு ரயில்களை இயக்கி சாதனை! – ஊரடங்கு காலத்தில் இந்தியன் ரயில்வே பெருமிதம்இந்த நிலையில் இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 100 சதவிகித சரியான நேரத்துக்கு ரயில்கள் இயக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 99.54 சதவிகிதம் சரியான நேரத்துக்கு ரயில்கள் இயக்கப்பட்டதுதான் சாதனையாக இருந்தது. அதுவும் 2020 ஜூன் 23ம் தேதி அந்த சாதனை நிகழ்ந்தது.

100 சதவிகிதம் சரியான நேரத்திற்கு ரயில்களை இயக்கி சாதனை! – ஊரடங்கு காலத்தில் இந்தியன் ரயில்வே பெருமிதம்ஒரே ஒரு ரயில் சில நிமிடம் தாமதமானதால் 100 சதவிகித சாதனை கைவிட்டுப் போனது. ஆனால், தற்போது அந்த சாதனையை அடைந்துவிட்டோம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இதை சாதனை என்று எப்படிக் கருத முடியும். எத்தனை ரயில் இயக்கப்பட்டது, எவ்வளவு துல்லியமாக இயக்கப்பட்டது என்ற விவரத்தை அளிக்க முடியுமா? ரயில் போக்குவரத்து சீரடைந்த பிறகு இந்த சாதனையை இந்திய ரயில்வே துறையால் தக்க வைக்க முடியுமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.