“ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய?”: அற்புதம்மாள் வேதனை!

 

“ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய?”: அற்புதம்மாள் வேதனை!

7 பேர் விடுதலை விவகாரத்தில் பதிலை மாநில அரசுதானே சொல்லவேண்டும்? செயல்பட வேண்டும்? என்று பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இரட்டை ஆளுள் தண்டனையும் தாண்டி உள்ளதால் அவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக இந்த வழக்கில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் பல ஆண்டுகாலமாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

“ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய?”: அற்புதம்மாள் வேதனை!

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கான ஆவணங்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் பல மாதங்களாக கிடப்பில் கிடந்த இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் தான் முடிவெடுப்பார் என்று ஆளுநர் கூறியுள்ளார். இதற்கு கண்டங்கள் வெகுவாக எழுந்துள்ளது.அதே சமயம் 7 பேர் விடுதலை கோரும் ஆவணங்களை ஆராய்ந்த பின்னரே குடியரசுத் தலைவர் முடிவை அறிவிப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவை முடிவை அவமதித்து; அரசமைப்பு வழங்கும் மாநில உரிமையையும் கேலி செய்திருக்கிறார் கவர்னர். என்ன செய்வதம்மா என பலரும் கொதிப்போடு் கேட்டபடி உள்ளனர்.
ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? பதிலை மாநில அரசுதானே சொல்லவேண்டும்? செயல்பட வேண்டும்? ” என்று பதிவிட்டுள்ளார்.