பேரறிவாளன் வீட்டுக்கு போட்ட பந்த செலவு – கடுமையாக சாடிய பாஜக

 

பேரறிவாளன் வீட்டுக்கு போட்ட பந்த செலவு – கடுமையாக சாடிய பாஜக

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த மே 28-ஆம் தேதி முதல் பரோலில் சென்றிருக்கிறார். பரோலில் சென்ற அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தன் வீட்டில் தங்கியிருக்கிறார். இதை அடுத்து ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பேரறிவாளன் வீட்டுக்கு போட்ட பந்த செலவு – கடுமையாக சாடிய பாஜக

இதனால் பேரறிவாளன் வீட்டின் முன்பாக பந்தல் போடப்பட்டு அதில் நாற்காலிகள் மற்றும் மின் விளக்குகள் வசதிகள் செய்யப்பட்டு அதில் போலீசார் அமர்ந்து வருகின்றனர். இந்தப் பந்தல் அமைப்பினை பந்தல் அமைப்பாளர் சம்பத் என்பவர் வாடகைக்காக செய்து கொடுத்திருந்தார். இதற்காக மொத்தம் 45 ஆயிரம் ரூபாய் வாடகை ஆகியிருக்கிறது.

பேரறிவாளன் வீட்டுக்கு போட்ட பந்த செலவு – கடுமையாக சாடிய பாஜக

45 ஆயிரத்திற்கான ரசீதை பிபோலீசிடம் கொடுத்திருக்கிறார் சம்பத். 50 நாட்கள் ஆகியும் போலீஸ் தரப்பில் 11 ஆயிரம் மட்டுமே சம்பத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மீதித்தொகை கொடுக்காததால் ஜோலார்பேட்டை போலீசில் சம்பத் புகார் அளித்து விட்டார். இதையடுத்து இரண்டு தவணைகளில் பாக்கி பணத்தை கொடுத்து விடுவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு, புகாரை வாபஸ் பெறச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் புகாரை வாபஸ் பெற்று விட்டால் தனக்கு பணம் கிடைக்காது என்று நினைத்த சம்பத் பணத்தை கொடுத்தால்தான் புகாரை வாபஸ் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

பேரறிவாளன் வீட்டுக்கு போட்ட பந்த செலவு – கடுமையாக சாடிய பாஜக

இதை அடுத்து நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பாக்கி பணத்தை போலீசார் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து சம்பத் புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். பில் பாஸ் செய்யப்பட்டு அரசு கருவூலம் மூலம் பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதற்குள் அவசரப்பட்டு சம்பத் புகார் செய்து விட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் வீட்டுக்கு போடப்பட்ட பந்தல் வாடகையை கொடுத்த போலீசாரின் செய்தி குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், முன்னாள் பிரதமரின் கொலை குற்றவாளியின் பாதுகாப்புக்கு மக்களின் வரிப்பணம் செலவிடப்படும் அவலம் இந்தியாவில் மட்டுமே முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.