கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன்

கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அழைத்துச் செல்லப்பட்டார்.

கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன்

ஒரு மாதம் பரோல் விடுப்பில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பேரறிவாளன் தங்கியிருந்தார். தற்போது நரம்பியல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டார்.

கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன்

கடந்த 29 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் ஏற்கனவே கடந்த இரண்டு முறை பரோலில் வந்திருந்தார். இதையடுத்து 3வது முறையாக பேரறிவாளனுக்கு 90நாட்கள் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு பரோல் வழங்க முடியாது என சிறைத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் அளித்தனர். இதை தொடர்ந்து பேரறிவாளன் கடந்த 10 ஆம் தேதி பரோலில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.