விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி!

 

விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி!

சிறுநீரக தொற்று, நீரிழிவு சிகிச்சைக்காக பேரறிவாளன் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் பரோலில் வந்துள்ளார். கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் அண்மையில் பரோலில் வந்தார். பரோல் விடுப்பில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பேரறிவாளன் தங்கியிருந்தார்.

விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி!

இந்நிலையில் சிறுநீரகத் தொற்று மற்றும் நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கான சிகிச்சைக்காக விழுப்புரத்தில் மரகதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் ரவிச்சந்திரன் அவர்களிடம் சிகிச்சை பெற இன்றும் மற்றும் நாளையும் விழுப்புரத்தில் சிகிச்சை பெறவுள்ளார்.

முன்னதாக தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி மாதம் ஒத்திவைத்துள்ள உச்ச நீதிமன்றம், கடந்த இரு தினங்களுக்கு முன் பேரறிவாளனுக்கு மேலும் ஒருவார காலம் பரோலை நீட்டித்தது. அத்துடன், பேரறிவாளனுக்கு சிகிச்சைக்கு செல்லும் போது அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.