பெரம்பலூர் அ.ம.மு.க நிர்வாகி கொலை… டி.டி.வி.தினகரன் கண்டனம்

பெரம்பலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாணவரணி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகர அ.ம.மு.க மாணவர் அணிச் செயலாளர் பாண்டி என்கிற வல்லத்தரசு, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். அவரது படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் படுகொலைகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் இனி நடக்காதவாறு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.ம.மு.க கட்சிப் பணிகளிலும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்குவதிலும் துடிப்போடு செயல்பட்டு வந்த பாண்டிய இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்

Most Popular

அமிதாப் பச்சனைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி ! சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்த நிலையில் தற்போது அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி !

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர்...

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது திமுக எம்.எல்.ஏ-வின் தந்தை துப்பாக்கிச்சூடு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இல்லலூர் செங்காடு பகுதியில் தாண்டவ மூர்த்தி மற்றும் குமார் என்பவருக்கு சொந்தமாக 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு போக்குவரத்துக்கு வழி இல்லாத காரணத்தினால் அரசு...

தங்கக் கடத்தல் வழக்கு- ஸ்வப்னா கைது

கேரளாவில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த ஸ்வப்னா பெங்களூரிவில் கைது செய்யபட்டுள்ளார். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக...
Open

ttn

Close