“மு.க ஸ்டாலின் தலைமையில் மக்கள் பணி தொடரும்” மகேந்திரன் அறிக்கை!

 

“மு.க ஸ்டாலின் தலைமையில் மக்கள் பணி தொடரும்” மகேந்திரன் அறிக்கை!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தின் வழிநின்று மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழக மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்கின்ற பெரும் கனவுகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் அரசியல் களத்தில் தளத்தில் பயணிக்கத் துவங்கினேன்.எனது உணர்வையும் என் சொல்லில் இருந்த உண்மையையும் தமிழக மக்கள் புரிந்துகொண்டு பேர் ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்தி உற்சாகம் அடைந்தனர்.என் மீதும் நான் முன்னெடுத்துச் செல்லவிருகின்ற அரசியல் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்கு சரியானதை செய்வதை மட்டுமே நான் அவர்களுக்கு காட்டும் அன்பும் அறமும் ஆகும்.

பெரும் எதிர்பார்ப்புடன் எனது அரசியல் பயணத்தை துவக்கி பயணித்தேன். சில இடர்பாடுகள் என் மக்கள் சேவையை தகர்ந்தது. நல்லவை எண்ணல் வேண்டும்; எண்ணிய முடிதல் வேண்டும் என்கின்ற நெஞ்சத்துடன் முன்னை விட துரிதமாக பயணிக்கத் துவங்கினேன்.

“மு.க ஸ்டாலின் தலைமையில் மக்கள் பணி தொடரும்” மகேந்திரன் அறிக்கை!

இன்றைய பயணத்தின் முக்கிய தருணம் திராவிட கொள்கையில் புதிய பரிமாணத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எனது அரசியல் பயணத்தை தொடங்கி விட்டேன். எந்தவித எதிர்பார்ப்புமின்றி என்னைப் போலவே இலட்சிய வேட்கையும், கொள்கை பிடிப்புடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடன்பிறப்புகள் தலைமைக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளது என்னை மிகவும் நெகிழ வைத்த ஒரு நிகழ்வு.இன்னும் பலரும் இது போல தொடர்ச்சியாக என்னுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய உள்ளனர்.

நான் எடுத்துக் கொண்ட இந்த அரசியல் பாதையில் நல்லோர் பலர் என்னுடன் சேர்ந்து இணைவது என்பது எனக்கு மிகப்பெரிய பெருமையும், மகிழ்ச்சியும். கடந்த காலங்களில் என்னுடைய மக்கள் சேவையில் நல்லவைகளும், அல்லவைகளும் கலந்து இருந்தது.

“மு.க ஸ்டாலின் தலைமையில் மக்கள் பணி தொடரும்” மகேந்திரன் அறிக்கை!

நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை ஒதுக்கித் தள்ளும் அன்னப் பறவை போல் எப்போதும் நான் நல்லதையும் சரியானதை மட்டுமே எனக்கு வழிகாட்டு முறைகளை கொண்டு பயணித்திருக்கிறேன். மருத்துவத்துறையிலும், விவசாயத் துறையிலும், தொழில் வணிக நிறுவனங்களிலும் இதே அணுகும் முறையை தான் எப்போதும் கடைப்பிடித்து வருகிறேன்.

மக்கள் பணி செய்வதே ஜனநாயகத்தின் அடிப்படை கடமை. அதனை தொடர எனக்கு வாய்ப்பளித்த திமுக தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைஞர் அணி செயலாளரும் மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி அவர்களுக்கும் மற்றும் கழக முன்னோடிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார், அண்ணா ,கலைஞர் என்னும் மாபெரும் ஆந்திராவில் தலைவர்கள் நமக்குச் சொல்லிச் சென்ற நம் இயக்கத்தின் கோட்பாடுகளாக அரசின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது ,ஆதிக்கமற்ற சமுதாயம, மறுமலர்ச்சிக்கான சீர்திருத்த பணியாற்றுவது ,சமதர்ம அடிப்படையில் அனைவருக்கும் நல்வாழ்வு , மாநில மொழிகளை வளர்த்தெடுப்பது ,மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி உருவாக்குவது தான். அனைத்து துறைகளிலும் அடிப்படை அறத்துடன் பயணிக்கும் எனக்கு தொடர்ந்து அன்புடனும் அக்கறையுடனும் ஆதரவளித்து வரும் தமிழக மக்களாகிய உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.