மக்களின் குறை தீர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மக்களின் குறை தீர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் ஒருங்கிணைப்பு மையம் என்ற பெயரில் குறைதீர்ப்பு மையம் அமைக்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மக்களின் குறை தீர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் இரண்டாம் நாளான இன்று காலை கேள்வி நேரத்துடன் தொடங்கப்பட்டது. அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் குறைகளை தீர்க்க மாநில அளவில் குறை தீர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும் என்றார். தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஒருங்கிணைப்பு மையம் என்ற பெயரில் குறைதீர்ப்பு மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

மக்களின் குறை தீர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதனிடையே  நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில் நீட் தேர்வு குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, “2010ல் மத்தியில் திமுக – காங்., ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வுக்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது ” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.