• April
    04
    Saturday

Main Area

Mainஒண்ணு குண்டாக இருக்கிறார்கள் அல்லது ஒல்லியாக இருக்கிறார்கள்… ஆய்வு சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட் !

மாதிரி படம்
மாதிரி படம்

ஒழுங்கா சாப்பிடுன்னு சொன்னாலும் கேக்கமாட்டோம், அதிகமா சாப்பிடாதே  சொன்னாலும் கேக்கமாட்டோம். இப்படி பட்ட ஒரு நிலையில் இருந்தால் தேவை இல்லாத உடல் உபாதைகள் நமக்கு நேரிடும்.ஒருவரின் மிகப்பெரிய சொத்து தனது உடலை எப்போதும் ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதே! பல பேர் அதைப் பத்தி கவலையே படுவதில்லை என்கிற செய்தி கவலையளிக்கிறது!

eating food

சமீபத்தில் வெளியாகிய ஒரு ஆய்வின் முடிவு , உலகின் ஏழ்மையான நாடுகளில் மூன்றில் ஒரு பகுதியினர் அதிகளவு உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாகச் சொல்கிறது.அறிக்கையில், அதிகளவு  பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதாலும்,போதிய உடற்பயிற்சி இல்லாததுமே இதற்கு முக்கிய பங்காக வகிக்கிறது என தெரிவித்துள்ளது. 

மேலும், மருத்துவர்களும் ஆய்வாளர்களும் இதற்கு தீர்வாக உணவில் ஒரு ஒழுங்கை கொண்டுவருவதும், இன்றிய நவீன உணவின் மாற்றங்கள் மிகவும் முக்கியம் என தெரிவிகின்றனர்.இதில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில், பாதிக்கப்பட்டுள்ளது துணை சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலுள்ள நாடுகளுமாம்!

junk food

மொத்தத்தில் இந்த கிரகத்தில் கிட்டத்தட்ட 2.3மில்லியன் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிக எடை கொண்டவர்கள் என்றும் 150 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சியைக் பாதித்துள்ளதாகவும் அறிக்கை கணித்துள்ளது.மேலும், இப்படி நடுத்தர மற்றும் கம்மியான வருவாய் ஈட்டுகிற நாடுகள் இதுபோன்ற அதிக உடற்பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கிறார்கள் இதனை "டபுள் பர்டன் ஆப் மால்னுட்ரிஷன்" என்று அழைக்கின்றனர். 

இதில் 20% மக்கள் அதிக எடையுடனும், நான்கு வயதிற்கும் கீழுள்ள 30% குழந்தைகள் வளர்ச்சி அடையாமலும், 20% பெண்கள் மெலிதாகவும் இருக்கிறார்கள்.ஒரு கூட்ட மக்களும், குடும்பங்களும் இது போன்ற இரு வகையான ஊட்டசத்து குறைபாட்டால் தங்கள் வாழ்வில் எந்த கட்டத்திலும் பாதிக்கப்படக்கூடும், 1990-ல் 123 நாடுகளில் 45 நாடுகளும், 2010ய-ல் 126 நாடுகளில் 48 நாடுகளும் பாதிக்கப்பட்டன.1990-களிலிருந்தே இந்நிலை தொடரப்பட்ட நிலையில் 2010-ல் 14 நாடுகள் மிகவும் குறைவான வருவாயுடன் இந்த இரட்டை சுமையுடன் உள்ளன. 

fat people

மக்களின் உணவு முறைகளை மாற்றுவது மிக அவசியமானதும், அதிக அளவிலான சூப்பர் மார்கெட்டுகளும் அவைகளில் கிடைக்கும் சத்தில்லாத உணவுகளை உண்பதும், போதியளவு உடற்பயிற்சி இல்லாததுமே அதிக உடை எடை அதிகரிக்க காரணிகளாய் திகழ்கின்றன.

பதப்படுத்தபட்ட உணவுகள் அதிகமாக சாப்பிட தூண்டும், இவை கேன்ஸர் மற்றும் விரைவில் மரணத்தை தந்துவிடும். அதிகளவு மாமிசம், காய்கறிகள், விதைகள் போன்றவை அதிகமாக உடல் எடையை ஏற்றிவிடும்.

இவை நடுத்தர, ஏழை மற்றும் அதிக வருவாய் ஈட்டும் மக்களையும் பாதிக்கின்றது. மேலும், அதிகளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவதால் அவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. 

hralthy grains

பாரம்பர்ய உணவுகளில் இருக்கும் சத்துக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினை தவிர்த்து, உடல் ஆரோக்கியத்துடனும் உடலினை நோய்கள் அண்டாதவாறு காக்கிறது. தற்போது அதுகளிலும் கலப்படம் செய்வதாக சொல்கிறார்கள். 

பதப்படுத்தப்பட்ட உணவுகளான பதப்படுத்தப்பட்ட மாமிசம்,குளிர்பானங்கள் அதிகளவு சர்க்கரை கொழுப்புசத்து, ட்ரான்ஸ் பாட், உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் பயங்கர டேஞ்சரானவை.அதற்கு பதில் இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய் கறிகள், முழு தானிய வகைகள், நார்சத்து, நட்ஸ் மற்றும் விதைகள் இவையெல்லாம் அதிகளவு தரமான உணவாக கருதப்படுகிறது. 

 

preserved meat

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடலினை கட்டுக்கோப்பாக வைத்துகொத்தாவது இகவும் இன்றியமையாத ஒன்று!

2018 TopTamilNews. All rights reserved.