5 மாதங்களுக்கு பிறகு வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

 

5 மாதங்களுக்கு பிறகு வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

சென்னை வடபழனி முருகன் கோவிலில் 5 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 5 மாதங்களாக மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டிருந்தன. அதனுள் வழிபாட்டு தலங்களும் ஒன்று. கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது ரூ.10,000க்கு கீழ் வருமானம் ஈட்டும் வழிபாட்டு தலங்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு மூடப்பட்டிருந்த வணிக வளாகங்கள், கோவில்கள், பூங்காக்கள் என அனைத்திலும் பணிபுரியும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவை அனைத்துக்கும் கடந்த 30 ஆம் தேதி அரசு அனுமதி அளித்தது.

5 மாதங்களுக்கு பிறகு வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

அதன் படி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நேற்று மால்கள், வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டது. அதனால் நேற்று கோவில்களில் ஏராளமான மக்கள் வழிபாடு செய்தனர். அதே போல மாவட்டங்களுக்குள்ளேயே பேருந்து சேவைகளும் தொடங்கப்பட்டது. பாதிப்பு குறையவில்லை என்றாலும் மக்கள் கொரோனா விழுப்புணர்வுடன் தங்களது பயணத்தை மேற்கொள்கின்றனர்.

5 மாதங்களுக்கு பிறகு வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

இந்த நிலையில், இன்று சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோவிலின் முன்பு நேற்று மழைநீர் சேகரிப்பு பணி நடைபெற்று வந்ததால், மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அந்த பணி நிறைவடைந்ததால் இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.