இந்த 3 நாட்களுக்கு மெரினா, பூங்காக்களில் அனுமதி இல்லை!

 

இந்த 3 நாட்களுக்கு மெரினா, பூங்காக்களில் அனுமதி இல்லை!

ஜனவரி 15,16,17ம் தேதிகளில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த 3 நாட்களுக்கு மெரினா, பூங்காக்களில் அனுமதி இல்லை!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து 4 நாட்கள் கொண்டாடப்படும் இந்நன்னாளில், மக்கள் வெளியே செல்வது வழக்கம். குறிப்பாக, காணும் பொங்கல் தினத்தின்று பூங்கா, கோவில்கள், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இன்னும் கொரோனா பரவல் முழுமையாக ஓயாததால், காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த 3 நாட்களுக்கு மெரினா, பூங்காக்களில் அனுமதி இல்லை!

இந்த நிலையில், வரும் ஜனவரி 15,16 மற்றும் 17ஆம் தேதிகளில் அனைத்து கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. வண்டலூர் பூங்கா, கிண்டி தேசிய பூங்கா , மாமல்லபுரம், மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அனுமதி இல்லை என்றும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அரசு தெரிவித்துள்ளது.