“திமுக கிராம சபை கூட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்” – ஜி.கே.வாசன் பேட்டி

 

“திமுக கிராம சபை கூட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்” – ஜி.கே.வாசன் பேட்டி

ஈரோடு

கிராம சபை கூட்டத்தை திமுக தேர்தலுக்காக அரசியல் சபையாக, மாற்ற நினைத்தால், அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் சட்டமன்ற தேர்தல் குறித்த கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த வாசன், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு, மக்களுடைய மனநிலையை தொடர்ந்து பிரதிபலிக்கிற ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்று கூறினார்.

“திமுக கிராம சபை கூட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்” – ஜி.கே.வாசன் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் தமாகாவின் பலத்திற்கு ஏற்றவாறு, அனைத்து மாவட்டங்களிலும், தொகுதிகளைப் பெறும் வகையில் அதிமுகவுடன் கலந்துபேசி சுமூகமான முடிவினை ஏற்படுத்துவோம் என்ற வாசன், தமாகா தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என்றும் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் நல்லவர்களை ஆதரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்த அவர், கிராம சபையை திமுக தேர்தலுக்காக அரசியல் சபையாக, மாற்ற நினைத்தால், அதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றும் கூறினார்.