“பிரச்சார ஸ்டைலை மாற்றாவிட்டால், மக்கள் கோபத்திற்கு ஆளாவீர்கள்” – ஸ்டாலினுக்கு, அமைச்சர் பாண்டியராஜன் எச்சரிக்கை

“பிரச்சார ஸ்டைலை மாற்றாவிட்டால், மக்கள் கோபத்திற்கு ஆளாவீர்கள்” – ஸ்டாலினுக்கு, அமைச்சர் பாண்டியராஜன் எச்சரிக்கை

திருவள்ளூர்

திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது பிரச்சார ஸ்டைலை மாற்றிக் கொள்ளாவிட்டால் பொதுமக்களின் நேரடி கோபத்திற்கு ஆளாக நேரிடும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

திருவள்ளூரில் நடந்த மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பாண்டியராஜன், மருந்து வணிகர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு கிடைப்பதாகவும், ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஆகியோரை பல இடங்களில் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாவும் கூறினார்.

“பிரச்சார ஸ்டைலை மாற்றாவிட்டால், மக்கள் கோபத்திற்கு ஆளாவீர்கள்” – ஸ்டாலினுக்கு, அமைச்சர் பாண்டியராஜன் எச்சரிக்கை

அத்துடன், உதயநிதி பிரச்சாரத்தின்போது விரசமாக பேசியது, பொதுமக்களை வெறுப்பில் ஆழ்த்தி இருப்பதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவினர் தங்களுடைய பிரச்சார ஸ்டைலை மாற்றிக்கொள்ளா விட்டால் பொதுமக்களின் நேரடி கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார். மேலும், தமிழகத்தில் திமுகவின் விரச பிரச்சாரம் எடுபடாது என்ற அமைச்சர் பாண்டியராஜன், கடந்த ஒரு மாதத்தில் அதிமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் மட்டுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.