வன கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்… மழை வேண்டி வன விலங்கு சிலைகளுக்கும் பிரார்த்தனை…

 

வன கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்… மழை வேண்டி வன விலங்கு சிலைகளுக்கும் பிரார்த்தனை…

ஈரோடு

கோபி அருகே மாட்டுப் பொங்கலையொட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள நவக்கிணறு மாதேஸ்வரன் கோயிலில் களிமண்ணால் ஆன கால்நடைகள் மற்றும் வன விலங்குளின் உருவங்களை வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ளது
கொண்டையம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பசு, எருது உள்ளிட்ட கால்நடைகள், யானை, மான், விஷ ஜந்துக்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் உருவங்களை களி மண்ணால் செய்து, வனப்பகுதியில் உள்ள நவகிணறு மாதேஸ்வரன் கோயிலுக்கு எடுத்துச்சென்று, பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

வன கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்… மழை வேண்டி வன விலங்கு சிலைகளுக்கும் பிரார்த்தனை…

அதன்படி, நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்தே கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின்
உருவங்களை களி மண்ணால் செய்ய தொடங்கினர். நேற்று மாட்டுப் பொங்கலையொட்டி, தங்கள் வீடுகளில் இருந்த களிமண் உருவங்களை தலையில் ஏந்தியவாறு 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்மற்றும் குழந்தைகள் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் துறைப்பாளையம் வனப்பகுதியில் அமைந்துள்ள நவக்கிணறு மாதேஸ்வரன் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அவர்களை டி.என்.பாளையம் வனத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வனத்திற்குள் அனுமதித்தனர்.

தொடர்ந்து, மாதேஸ்வரன் கோயிலை சென்றடைந்த கிராமமக்கள், அங்கு சுவாமிக்கு புதுப்பானையில் பொங்கல் வைத்து, படையலிட்டு, களிமண்ணால் ஆன உருவங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்துவழிபாடு செய்தனர். தொடர்ந்து கோயிலில் உள்ள கிணற்று நீரை தீர்த்தமாக பெற்றுச்சென்று, வீட்டின் தொழுவத்தில் தெளித்து பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு உணவு வழங்கினர்.

வன கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்… மழை வேண்டி வன விலங்கு சிலைகளுக்கும் பிரார்த்தனை…

இதுகுறித்து பேசிய, அந்தபகுதி மக்கள், களிமண்ணால் ஆன உருவங்களை நேர்த்திக் கடனாக செலுத்துவதன் மூலம் கால்நடைகள் மற்றும்வன விலங்குகள் நோய் நொடியின்றி சுவாமி பாதுகாப்பதாகவும், ஆண்டுதோறும் தவறாமல் மழை பெய்து வனப்பகுதியும், விவசாயமும் செழிக்கும் என்பது ஐதீகம் என்றும் தெரிவித்தனர்.