தாமதமாக வந்த எம்எல்ஏக்கள்… ‘ரூ.2,000 பெற’ 4 மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்!

தாமதமாக வந்த எம்எல்ஏக்கள்… ‘ரூ.2,000 பெற’ 4 மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக அரியணையில் அமர்ந்த மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற முதல் நாளிலேயே கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

தாமதமாக வந்த எம்எல்ஏக்கள்… ‘ரூ.2,000 பெற’ 4 மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்!

அதில், முதல் தவணையாக 2000 ரூபாயை இந்த மாதமே கொடுக்க ஆணையிட்டார். அதன் படி முதல் தவணை பணம் விநியோகம் செய்யப்பட ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில், தஞ்சாவூரில் ரூ.2,000 நிவாரண நிதியை பெறுவதற்காக பொதுமக்கள் 4 மணி நேரம் காத்திந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தஞ்சாவூரில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு நிவாரண நிதியை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகர், தஞ்சாவூர் எம்எல்ஏ நீலமேகம், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாமதமாக வந்த எம்எல்ஏக்கள்… ‘ரூ.2,000 பெற’ 4 மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்!

காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதற்கு முன்னரே குறிப்பிட்ட இடத்தில் கூடியுள்ளனர். ஆனால் 12 மணிக்கு மேலாகியும் எம்எல்ஏக்கள் வரவில்லையாம். பிறகு, பிற்பகல் 12 மணிக்கு எம்எல்ஏக்கள் வந்த எம்எல்ஏக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பணத்தை விநியோகம் செய்துள்ளனர். ரூ.2000 பெறுவதற்காக 4 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.