லாக்டவுன் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் மத்திய பிரதேச மக்கள்… ஆன்மீக தலைவர் இறுதி சடங்கில் குவிந்த கூட்டம்…

 

லாக்டவுன் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் மத்திய பிரதேச மக்கள்… ஆன்மீக தலைவர் இறுதி சடங்கில் குவிந்த கூட்டம்…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் இம்மாதம் 31ம் தேதி வரை லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். வெளியே வரும்போது மாஸ்க் அணிந்து வர வேண்டும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் இறுதி சடங்கில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறையும் அமலில் உள்ளது.

லாக்டவுன் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் மத்திய பிரதேச மக்கள்… ஆன்மீக தலைவர் இறுதி சடங்கில் குவிந்த கூட்டம்…

மத்திய பிரதேசத்தில் தாதாஜி என அழைக்கப்படும் ஆன்மீக தலைவர் தேவ்  பிரபாகர் சாஸ்திரி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். கட்னியில் கடந்த திங்கட்கிழமையன்று அவரது இறுதி சடங்கு நடைபெற்றது.  இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். இது தொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. லாக்டவுன் விதிமுறைகளை காற்றி பறக்க விட்டு மக்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் மக்கள் லாக்டவுன் விதிமுறைகள் மீறுவது இது முதல் முறையல்ல. அண்மையில் சாகர் மாவட்டத்தில் உள்ள பந்தா நகருக்கு ஜெயின் துறவி பரமன்சாகர் தனது 22 சீடர்களுடன் வந்தார். அவரை வரவேற்க ஏராளமான மக்கள் வீதிகளுக்கு வந்தனர். துறவியை பார்க்கும் எண்ணத்தில் மக்கள் சமூக விலகலையும், முன்எச்சரிக்கை நடவடிக்கையான மாஸ்க்கும் அணிய வேண்டும் என்பதையும் கடைப்பிடிக்கவில்லை. இதுவும் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு மவுனம் சாதித்தது