தொடர்ந்து உயரும் தங்கம் விலை; அதிர்ச்சியில் மக்கள்!

 

தொடர்ந்து உயரும் தங்கம் விலை; அதிர்ச்சியில் மக்கள்!

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.

பொதுமுடக்கக் காலத்தில் வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்த தங்கம் விலை, ரூ.43 ஆயிரத்தை எட்டியது. இந்த விலை உயர்வு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமுடக்கம் நீடித்தால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற வெளியான செய்தி, மக்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதத்தில் தங்கம் விலை கணிசமாக குறைந்தது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை; அதிர்ச்சியில் மக்கள்!

சுமார் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் குறைந்த தங்கம் தற்போது ரூ.37 ஆயிரத்தில் நீடிக்கிறது. இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது. ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.3 உயர்ந்ததால் ஒரு கிராம் தங்கம் ரூ.4,717 க்கும் ஒரு சவரன் ரூ.37,760க்கும் விற்பனையாகிறது. அதே போல 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.5,098க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.40,784க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை; அதிர்ச்சியில் மக்கள்!

சென்னையில் விலை நிலவரம் இவ்வாறு இருக்கும் நிலையில், டெல்லி மற்றும் கொல்கத்தாவில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும், வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிலோ ரூ. 67,100க்கு விற்பனையாகிறது. தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.