சந்திர கிரகணத்தின் போது தெரிந்த ‘ஸ்ட்ராபெரி நிலவு’.. வியப்புடன் கண்டு ரசித்த மக்கள்!

சந்திர கிரகணத்தின் போது தெரிந்த ‘ஸ்ட்ராபெரி நிலவு’.. வியப்புடன் கண்டு ரசித்த மக்கள்!

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிந்திருக்கும். அதன் படி இந்த ஆண்டின் 2 ஆவது சந்திர கிரகணம் நேற்று தோன்றியது. நள்ளிரவு 11:15 மணிக்கு தொடங்கிய இந்த கிரகணம் அதிகாலை 2.30 மணி வரை நிகழ்ந்தது. வழக்கமாக இருக்கும் சந்திர கிரகணத்தை விட இது மாறுபட்டு இருக்கும் என்றும் இதற்கு “ஸ்ட்ராபெரி நிலவு” என்றும் வானிலை ஆய்வாளர்கள் பெயரிட்டிருந்தனர்.

சந்திர கிரகணத்தின் போது தெரிந்த ‘ஸ்ட்ராபெரி நிலவு’.. வியப்புடன் கண்டு ரசித்த மக்கள்!

இதனை வெறும் கண்களிலேயே பார்க்கலாம் என்றும் தொலை நோக்கி மூலம் பார்த்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொடைக்கானல் வான் இயற்பியல் மையத்தில் இருந்து இந்த ஸ்ட்ராபெரி நிலவை பார்த்த போது, ஒளிரும் வண்ணமிகு வட்டங்களோடு தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பலர் இந்த நிலவை வீடுகளிலேயே இருந்த படி பார்த்து ரசித்தனர்.