12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பால் டாஸ்மாக்குகளில் அலைமோதும் மதுப்பிரியர்கள்.. போலீசார் குவிப்பு!

12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பால் டாஸ்மாக்குகளில் அலைமோதும் மதுப்பிரியர்கள்.. போலீசார் குவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த 4 மாவட்டங்களிலும் வரும் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் முழு ஊரடங்கை சமாளிக்க காய்கறிகளை வாங்கிச் செல்ல மார்கெட்டுகளில் மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் சமூக விலகல் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பால் டாஸ்மாக்குகளில் அலைமோதும் மதுப்பிரியர்கள்.. போலீசார் குவிப்பு!

இதே நிலை தான் டாஸ்மாக் கடைகளிலும். ஏற்கனவே 2 மாதங்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்து மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தற்போது 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது. இதன் காரணமாக மது வாங்கி ஸ்டாக்கில் வைத்துக் கொள்ள, டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.