darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



ஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25! அரசு அதிரடி!!

onion
onion

ஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 என விற்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் அடித்துகொண்டு வாங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்காயம் உற்பத்தி அதிகம் நடைபெறும் பகுதிகளில் பெய்த எதிர்பாராத மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்தன. இதனால் உற்பத்தி பாதித்தது மற்றும் சப்ளையில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் உள்நாட்டில் வெங்காயத்தின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது. இதனால் நடுத்தரவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெங்காய விலை ஏறுமுகத்திலே உள்ளது. வெங்காய விலையுயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

 

 

இதனிடையே, ஆந்திர மாநில அரசு சார்பில் மலிவு விலையில் வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் கிலோ வெங்காயம் ரூ.95க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், அரசு சார்பில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்கப்படுகிறது. இதனை  வாங்க மக்கள் அடித்துப்பிடித்துக்கொண்டு அலைமோதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் கீழே விழுந்து காயமடைந்ததும் குறிப்பிடதக்கது.

2018 TopTamilNews. All rights reserved.