சிக்னலை மறைத்து அதிமுக கட்அவுட்… “நீங்களாம் திருந்தவே மாட்டீங்ளா அறிவாளிகளா?” – கொதிக்கும் மக்கள்!

சிக்னலை மறைத்து அதிமுக கட்அவுட்… “நீங்களாம் திருந்தவே மாட்டீங்ளா அறிவாளிகளா?” – கொதிக்கும் மக்கள்!

ஒரு பேனரால் உயிரை இழந்தார் இளம்பெண் சுபஸ்ரீ. அப்போதே உயர் நீதிமன்றம் இனி எங்கும் பேனர்களோ, கட்அவுட்டோ சாலையோரங்கள் உள்பட எங்கும் வைக்கக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இருதற்போதைய அரசியல் கட்சிகளின் உயிரே பேனர்கள் தான். அதன் அடிமடியிலேயே நீதிமன்றம் கைவைத்து விட்டது. கொஞ்ச நாள்களாக உத்தரவை மதிப்பது போல் நடித்துவிட்டு, தற்போது தேர்தல் நெருங்கியதும் ஆங்காங்கே பேனர்களை முளைக்க வைக்கின்றனர். அதிலும் பெரும்பான்மையாக ஆளுங்கட்சி ஆட்களே இருக்கிறார்கள்.

சிக்னலை மறைத்து அதிமுக கட்அவுட்… “நீங்களாம் திருந்தவே மாட்டீங்ளா அறிவாளிகளா?” – கொதிக்கும் மக்கள்!

ஒரு மாதத்திற்கு முன்பு முதல்வர் கோவைக்குப் பிரச்சாரம் செய்யச் சென்றார். அப்போது அமைச்சர் வேலுமணி தரப்பில் ராட்சத கட்அவுட் வைத்தார்கள். அதுமட்டுமில்லாமல் வேகத்தடைகளையும் உடைத்தெறிந்தார்கள். அப்போதே பொதுமக்கள் கொதித்தெழுந்தனர். சசிகலா வருகைக்கு முன்பு வரை சென்னையில் அமைச்சர்களுக்கு கட்அவுட் வைப்பதைத் தடுக்காத மாநகராட்சி, அவர் வருகைதந்த நாளில் கட்அவுட் வைக்கக் கூடாது என்று ஆணையிட்டது. அப்போ இவ்ளோ நாளா எங்க போயிருந்தீங்க? மத்தவங்களுக்கு ஒரு சட்டம்; ஆள்பவர்களுக்கு ஒரு சட்டமா என மக்கள் கேள்வியெழுப்பினார்கள்.

சிக்னலை மறைத்து அதிமுக கட்அவுட்… “நீங்களாம் திருந்தவே மாட்டீங்ளா அறிவாளிகளா?” – கொதிக்கும் மக்கள்!

இதையெல்லாம் விட விவசாயிகள் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதை மாநிலம் முழுவதும் பேனர் அடிச்சி காட்சிப்படுத்துங்க என்று முதல்வரே தன்னுடைய புகழ்பாட உத்தரவிட்டாராம். ஒரு மாநிலத்தை ஆள்பவரை நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படுவது தவறான முன்னுதாரணம் என சமூகச் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். தற்போது இந்த விவகாரங்களையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு திருப்பூரில் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

சிக்னலை மறைத்து அதிமுக கட்அவுட்… “நீங்களாம் திருந்தவே மாட்டீங்ளா அறிவாளிகளா?” – கொதிக்கும் மக்கள்!

திருப்பூர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தான் இச்சம்பவத்தைச் செய்திருக்கிறார்கள். இன்று திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் இரண்டாம் நாளாகப் பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதால், அவரை வரவேற்க மாவட்டத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பேனர்கள், கட்அவுட்டுகள் வைத்துள்ளனர். அதில் ஒரு கட்அவுட்டை தாராபுரம் சிக்னலை மறைத்துக் கட்டியிருக்கிறார்கள். இவ்வாறு சிக்னலை மறைத்துக் கட்டினால் எப்படி சாலைகளில் வரும் வண்டிகளைப் பார்ப்பது என்று கேட்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

சிக்னலை மறைத்து அதிமுக கட்அவுட்… “நீங்களாம் திருந்தவே மாட்டீங்ளா அறிவாளிகளா?” – கொதிக்கும் மக்கள்!

பற்றாக்குறைக்கு அந்தப் பகுதி விபத்துப் பகுதி வேறாம். அடிக்கடி விபத்து நிகழ்வதால் Accident Zone போர்டையும் அங்கே வைத்திருக்கிறார்கள் போக்குவரத்துத் துறையினர். அந்த போர்டையும் மறைத்தே கட்அவுட் கட்டப்பட்டியிருக்கிறது. கட்சித் தலைமைக்குத் தங்களின் பலத்தைக் காட்டுவதற்காக, பொதுமக்களின் உயிர்களோடு விளையாடுவது எந்த வகையில் நியாயம் என்கின்றனர் சமூகச் செயற்பாட்டாளர்கள். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய ஒரு இடத்தில் இருந்துகொண்டு, அதை மீறி செயல்படுவது நிச்சயம் கண்டனத்துக்குரியதே!