எங்க ஏரியாவுக்குள்ள வராதீங்க… தனியார் பள்ளியில் அமைக்கப்பட இருந்த தனிமை முகாமை எதிர்த்து மக்கள் போராட்டம்!

எங்க ஏரியாவுக்குள்ள வராதீங்க… தனியார் பள்ளியில் அமைக்கப்பட இருந்த தனிமை முகாமை எதிர்த்து மக்கள் போராட்டம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்வதும் அதிகரித்து வருகின்றன. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் போதாமையால் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தனிமைப்படுத்துவதற்காக முகாமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

எங்க ஏரியாவுக்குள்ள வராதீங்க… தனியார் பள்ளியில் அமைக்கப்பட இருந்த தனிமை முகாமை எதிர்த்து மக்கள் போராட்டம்!

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக நபர்கள் வெளியிலிருந்து வந்து கொண்டிருப்பதால் அங்கே கோரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தனிமைப்படுத்த படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

முன்னராகவே, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் படுக்கை வசதிகள் குறைவாக இருப்பதால் அருகில் உள்ள தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டு வந்தன. தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அருகிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறப்பு தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எங்க ஏரியாவுக்குள்ள வராதீங்க… தனியார் பள்ளியில் அமைக்கப்பட இருந்த தனிமை முகாமை எதிர்த்து மக்கள் போராட்டம்!

இதைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் சில தினங்களுக்கு முன்பு அந்த தனியார் பள்ளி வளாகத்திற்குள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று அந்தப் பகுதி மக்கள் மீண்டும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் முகக்கவசங்கள் அணிந்தும் கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.