80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்!

 

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். ஒரு தொகுதிக்கு ரூ.30 லட்சம் மட்டுமே செலவிட வேண்டுமென உத்தரவிட்ட அவர், தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் தபால் வாக்கு முறை பின்பற்றப்படும் என்றும் கூறினார்.

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்!

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்கள், கப்பல் ஊழியர்கள், விமான ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் தபால் ஓட்டு வசதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்களை கொடுப்பவர்களுக்கு மட்டுமே தபால் வாக்குகள் அளிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.