கொரானா டாக்டர்கள் -பயந்த பக்கத்து வீட்டினர் -லிஃப்டுக்குள் நடந்த கொடுமை .

 

கொரானா டாக்டர்கள் -பயந்த பக்கத்து வீட்டினர் -லிஃப்டுக்குள் நடந்த கொடுமை .

கொரானா பீதியில் டாக்டர்களை லிப்ட்டில் ஏற்ற மறுத்த ஒரு அபார்ட்மெண்ட் மக்கள் மீது அந்த டாக்டர்கள் புகார் கூறியுள்ளனர் .

கொரானா டாக்டர்கள் -பயந்த பக்கத்து வீட்டினர் -லிஃப்டுக்குள் நடந்த கொடுமை .

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் டாக்டர் ரிதுபர்ணா பிஸ்வாஸ் ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். அவரது தங்கை தீபன்விதா பிஸ்வாஸ் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார் .இவர்கள் இருவரும்  ஆர்.எச். கார்  மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்கள் .இது 290 படுக்கைகள் கொண்ட கோவிட்-19நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஹாஸ்ப்பிட்டல் . இந்த டாக்டர் சகோதரிகள்  விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டுவசதி குடியிருப்பின்  மேல் தளத்தில் வசிக்கின்றனர் .

இந்நிலையில் கடந்த  திங்கள்கிழமை காலை, இரண்டு சகோதரிகளும் அவர்கள் பணியாற்றும் ஹாஸ்ப்பிட்டலுக்கு செல்ல அந்த அபார்ட்மென்டின் லிஃப்டுக்கு வந்தனர் .அப்போது அவர்களை அந்த அப்பார்ட்மென்டில் வசிக்கும் சில குடியிருப்புவாசிகள் அந்த லிஃப்டுக்குள் வர தடை போட்டனர் .அவர்கள் எதற்காக தங்களை தடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ,அவர்கள் கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை யலிப்பதாகவும் , அவர்கள் லிப்ட்டில் வந்தால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாகவும் கூறி தடுத்தனர் .இதனால் மிக மன உளைச்சலுக்கு ஆளான அந்த டாக்டர்கள் மருத்துவ கௌன்சிலுக்கு இதை தெரிய படுத்தினார்கள் .பிறகு மருத்துவ நிபுணர்களின் நலனுக்காக செயல்படும் ‘ ப்ரொடெக்ட் தி வாரியர்ஸ்’, மாநில சுகாதாரத் துறைக்கு இது பற்றி ஒரு கடிதம் எழுதியுள்ளது.அவர்கள் அந்த புகாரின்  பேரில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள் .மேலும் அந்த டாக்டர்கள் டம் டம் காவல் நிலையத்திலும் ஒரு  புகாரை  பதிவு செய்தனர்.