மாஸ்க் அணியாமல் நடைபயிற்சி செய்யும் மக்கள்.. தலைமை செயலகம் அருகே கொரோனா பரவும் அபாயம்!

மாஸ்க் அணியாமல் நடைபயிற்சி செய்யும் மக்கள்.. தலைமை செயலகம் அருகே கொரோனா பரவும் அபாயம்!

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,438 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மாஸ்க் அணியாமல் நடைபயிற்சி செய்யும் மக்கள்.. தலைமை செயலகம் அருகே கொரோனா பரவும் அபாயம்!

ஆனால் சென்னை தலைமை செயலகத்துக்கு எதிரே இருக்கும் பூங்காவில் மக்கள் மாஸ்க் அணியாமல் நடைப்பயிற்சி செய்வதுகாக் குற்றசசாட்டு எழுந்துள்ளது. அரசின உத்தரவான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக விலகலை கடைபிடிக்காததால் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளது. ஏற்கனவே சென்னையில் கொரோனா பாதிப்பு 19,000 ஐ எட்டியுள்ள நிலையில், மக்காள் இவ்வாறு விழுப்புணர்வு இல்லாமல் இருப்பதால் அந்த பூங்காவை மூட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.