கொரோனாவிலும் காலி குடங்களுடன் அலையும் மக்கள்.. மீண்டும் தலைதூக்கும் தண்ணீர் பிரச்சனை!

 

கொரோனாவிலும் காலி குடங்களுடன் அலையும் மக்கள்.. மீண்டும் தலைதூக்கும் தண்ணீர் பிரச்சனை!

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனை மக்கள் கடைபிடிக்கிறார்களா என்று மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகமும் கொரோனாவில் இருந்து மக்களை காக்க அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது.

கொரோனாவிலும் காலி குடங்களுடன் அலையும் மக்கள்.. மீண்டும் தலைதூக்கும் தண்ணீர் பிரச்சனை!

வழக்கமாக கோடைகாலத்தின் போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும். அதே போல இந்த ஆண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஆங்காங்கே நிலவுகிறது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மோகூர் கிராமத்தில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகையில், வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன், கொரோனாவை கூட பொருட்படுத்தாமல் சுற்றித்திரிகின்றனர். மக்களின் சிரமத்தை அறிந்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.