பிரபலமாகும் பாய்காட் மாஸ்க்…. சீன பொருட்களை புறக்கணிக்க ஜம்மு அண்டு காஷ்மீர் மக்கள் முடிவு…

பிரபலமாகும் பாய்காட் மாஸ்க்…. சீன பொருட்களை புறக்கணிக்க ஜம்மு அண்டு காஷ்மீர் மக்கள் முடிவு…

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீன வீரர்களின் முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். இருப்பினும் அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாட்டு மக்களை மிகவும் உலுக்கியது. இதன் எதிரொலியாக தற்போது அனைத்து தரப்பினரும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என சொல்ல தொடங்கி விட்டனர்.

பிரபலமாகும் பாய்காட் மாஸ்க்…. சீன பொருட்களை புறக்கணிக்க ஜம்மு அண்டு காஷ்மீர் மக்கள் முடிவு…

இந்த சூழ்நிலையில் யூனியன் பிரதேசமான ஜம்மு அண்டு காஷ்மீரில் உள்ள மக்கள் சீன பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நேற்று ஜம்மு அண்டு காஷ்மீரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாய்காட் சீனா மாஸ்க்களை ஆர்வமாக வாங்கினர். கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடான மோதலுக்கு பிறகு பாய்காட் சீனா மாஸ்க்கு தேவை அதிகரித்துள்ளது.

பிரபலமாகும் பாய்காட் மாஸ்க்…. சீன பொருட்களை புறக்கணிக்க ஜம்மு அண்டு காஷ்மீர் மக்கள் முடிவு…

boycott made in china (சீனாவில் தயாரிக்கப்பட்டவை புறக்கணித்தல்), boycott red china (சிகப்பு சீனாவை புறக்கணித்தல்) மற்றும் buy made in india (இந்தியாவில் தயாரிக்கப்பட்டதை வாங்குங்க) போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட மாஸ்க்களுக்கு தற்போது தேவை அதிகரித்துள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவான கோஷங்களை மட்டுமே கேட்டு வந்த ஜம்மு அண்டு காஷ்மீரில் தற்போது இந்தியாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.