கொரோனா முதல் அலைக்கு பிந்தைய அரசாங்கத்தின் அலட்சியமே இரண்டாம் அலைக்கு காரணம்- ஆர்.எஸ்.எஸ்

 

கொரோனா முதல் அலைக்கு பிந்தைய அரசாங்கத்தின் அலட்சியமே இரண்டாம் அலைக்கு காரணம்- ஆர்.எஸ்.எஸ்

கொரோனா தொற்றின் முதல் அலைக்கு பின் அரசு அலட்சியமாக மாறியது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மக்களிடையே நம்பிக்கையையும் நேர்மறை எண்ணங்களையும் ஊக்குவிப்பதற்காக டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் ‘பாசிட்டிவிட்டி அன்லிமிடெட்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

RSS chief Mohan Bhagwat tests Covid-19 positive, hospitalised | Business  Standard News

இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “கொரோனா தொற்றின் முதல் அலையை தொடர்ந்து அரசு அலட்சியம் காட்ட ஆரம்பித்தது. இதுவே நாடு தழுவிய மருத்துவ நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. மக்களும் அலட்சியமாக செயல்பட தொடங்கிவிட்டனர். ஆனால் மருத்துவர்கள் எச்சரித்து கொண்டேதான் இருந்தனர். இப்போது மருத்துவர்கள் மூன்றாவது அலை இருக்கக்கூடும் என்று சொல்கிறார்கள். அதனை கண்டு பயப்பட வேண்டுமா? அல்லது வைரஸுக்கு எதிராகப் போராடி வெற்றிபெற சரியான அணுகுமுறை இருக்கிறதா? என்பது கேள்விக்குறியே. தற்போதைய அனுபவங்களிலிருந்து மக்களும் அரசாங்கமும் அடுத்த அலைக்கு தயாராக கற்றுக்கொள்ளவேண்டும்” எனக் கூறினார்.