ஈரோட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமல்… முந்தைய நாளே பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்…

 

ஈரோட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமல்… முந்தைய நாளே பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்…

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்று மார்க்கெட்களில் காய்கறி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 500-ஐ கடந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, இன்று முதல் இனி காய்கறி, மளிகை, தேநீர், இறைச்சி கடைகள், மீன் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து விதமான கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமல்… முந்தைய நாளே பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்…

இதேபோல், ஜவுளி கடைகள், பாத்திரக் கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள் உட்பட அனைத்து வகையான கடைகள் மூடப்படும். பேருந்து போக்குவரத்தை பொறுத்தவரை தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து, 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், டாக்ஸி, ஆட்டோவுக்கும் இதை முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். ஆனால் பார்சலில் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்படும்.

ஈரோட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமல்… முந்தைய நாளே பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்…

இதேபோல் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும், ஆனால் பார்சல் மட்டுமே மேலே குறிப்பிட்ட நேரப்படி உணவு வழங்கப்படும். ஏற்கனவே மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், சலூன் கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நாளை முதல் ஊரகப் பகுதிகளிலும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 37 தியேட்டர்களும் நாளை முதல் செயல்படாது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதையொட்டி, நேற்று காய்கறி மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. குறிப்பாக நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.