ஈரோட்டில் கொரோனாவில் இருந்து மீண்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மேள, தாளங்கள் முழங்க மக்கள் உற்சாக வரவேற்பு

ஈரோடு, செப். 5:

ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து பணிக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, பொதுமக்கள், போலீசார் இணைந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோட்டில் கொரோனாவில் இருந்து மீண்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மேள, தாளங்கள் முழங்க மக்கள் உற்சாக வரவேற்பு

ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கோபிநாத். இவருக்கு, கடந்த மாதம் 14ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஈரோட்டில் கொரோனாவில் இருந்து மீண்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மேள, தாளங்கள் முழங்க மக்கள் உற்சாக வரவேற்பு

அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக தொற்றில் இருந்து குணமடைந்து, வீட்டிற்கு அனுப்பப்பட்டார். வீட்டில் ஒரு வாரம் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் கோபிநாத், முழுமையாக தொற்றில் இருந்து குணமடைந்து நேற்று அவரது பணிக்கு

ஈரோட்டில் கொரோனாவில் இருந்து மீண்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மேள, தாளங்கள் முழங்க மக்கள் உற்சாக வரவேற்பு

திரும்பினார். அப்போது, கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் பி.பெ.அக்ரஹார பகுதி மக்கள், தொழிலாளர்கள் இன்ஸ்பெக்டருக்கு மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோட்டில் கொரோனாவில் இருந்து மீண்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மேள, தாளங்கள் முழங்க மக்கள் உற்சாக வரவேற்பு

மேலும், மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகம், இன்ஸ்பெக்டருக்கு மலர் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதைத்தொடர்ந்து போலீசாரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.  செய்தி;அமுதினி