‘எந்த கட்சி அரியணை ஏறும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்’ முதல்வர் பழனிசாமி காட்டம்

 

‘எந்த கட்சி அரியணை ஏறும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்’ முதல்வர் பழனிசாமி காட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மும்மொழி கொள்கையை புதிய கல்விக் கொள்கை அறிவுறுத்துவதால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது சமூக வலைதளங்களிலும் தற்போது பேச்சு பொருளாக மாறியிருக்கிறது. இது மட்டுமில்லாமல் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க வரைவறிக்கைக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லையில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்த பிறகு முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

‘எந்த கட்சி அரியணை ஏறும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்’ முதல்வர் பழனிசாமி காட்டம்

அப்போது பேசிய அவர், புதிய கல்விக் கொள்கை குறித்தும் சுற்றுச்சூழல் தாக்க வரைவறிக்கை குறித்தும் அரசு நியமித்துள்ள குழுவின் அடிப்படையிலேயே கொள்கை முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். அதனைத்தொடர்ந்து பொதுபோக்குவரத்து குறித்து பேசிய அவர், கொரோனா தாக்கம் குறைந்ததும் பொதுப்போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் இபாஸ் நடைமுறையை தகர்க்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். மேலும் திமுகவை அரியணை ஏற்ற முக ஸ்டாலின் சூளுரைத்தது குறித்து பேசிய அவர், அடுத்த ஆட்சியில் எந்த கட்சி அரியணை ஏறும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.