‘தற்காலிக காய்கறி சந்தையில் குவிந்த மக்கள்’.. காற்றில் பறந்த சமூக இடைவெளி!

 

‘தற்காலிக காய்கறி சந்தையில் குவிந்த மக்கள்’.. காற்றில் பறந்த சமூக இடைவெளி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னையைத் தவிரப் பிற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக வேலூரிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1,249 ஆக இருக்கிறது. அங்குப் பாதிப்பு குறைவாகவே இருந்தும் சென்னையிலிருந்து சென்றவர்களால் கொரோனா பரவியதாகவும் மொத்த காய்கறி வியாபார சந்தையான நேதாஜி சந்தை மூலம் கொரோனா பரவியதாகவும் கூறப்பட்டது.

‘தற்காலிக காய்கறி சந்தையில் குவிந்த மக்கள்’.. காற்றில் பறந்த சமூக இடைவெளி!

அதனால் நேதாஜி சந்தை மூடப்பட்டு கொணவட்டத்தில் உள்ள மாங்காய் மண்டியில் இன்று முதல் தற்காலிக சந்தை செயல்படத் தொடங்கியது. அங்கு மக்கள் காய்கறி வாங்கக் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளனர். மக்கள் கூட்டமும் வாகனங்களும் அதிகமாக இருந்ததால் பல மணி நேரம் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வரும் இந்த நிலையில், மக்கள் கூட்டம் அலைமோதியதால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியுள்ளனர்.

ஏற்கனவே கொரோனா பரவியதால் தான் நேதாஜி சந்தை மூடப்பட்டு இங்குத் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. தற்போது அங்கும் மக்கள் கூட்டம் இருப்பதால் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. முன்னதாக மாங்காய் மண்டியில் தற்காலிக சந்தை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.