காய்கறி மார்க்கெட்டில் குவிந்த மக்கள்; இறைச்சிக் கடைகள் வெறிச்சோடியது

 

காய்கறி மார்க்கெட்டில் குவிந்த மக்கள்;  இறைச்சிக் கடைகள் வெறிச்சோடியது

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக ஈரோடு பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வந்தது. பின்னர் பஸ் போக்குவரத்து தொடங்கியதால் ஈரோடு வ.உசி பூங்கா பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு 700க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு மலிவான விலையில் காய்கறிகள் கிடைப்பதால் மொத்த வியாபாரிகள் சில்லரை வியாபாரிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர்.

காய்கறி மார்க்கெட்டில் குவிந்த மக்கள்;  இறைச்சிக் கடைகள் வெறிச்சோடியது

இதனால் வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் எப்போதும் கூட்டம் காணப்படும். இங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிறு வியாபாரிகள் ,சில்லரை வியாபாரிகள் ,பொதுமக்கள் ஏராளமானோர் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

பொதுமக்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

காய்கறி மார்க்கெட்டில் குவிந்த மக்கள்;  இறைச்சிக் கடைகள் வெறிச்சோடியது

புரட்டாசி மாசம் தொடங்கியுள்ளதால் ஏராளமானோர் அசைவத்தில் இருந்து இந்த ஒரு மாதத்திற்கு சைவத்துக்கு மாறி உள்ளனர். இதனால் காய்கறி தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து காய்கறி விலையும் சற்று உயர்ந்துள்ளது.

இதேபோல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் இறைச்சிக் கடைகள் மற்றும் ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் உள்ள மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது புரட்டாசி மாசம் தொடங்கியுள்ளதால் இறைச்சிகள் மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது பல்வேறு இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது..