தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம்!

 

தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் முன்பை காட்டிலும் பலவிதமான தளர்வுகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மண்டலங்களுக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்பவர்களுக்கு இ பாஸ் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற மாநிலங்கள் செல்பவர்கள் ஆன்லைன் மூலமாக இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம்!

பத்திரப்பதிவுக்கு செல்பவர்கள் இ பாஸ் பெறத்தேவையில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்த அரசு, தற்போது பத்திரப்பதிவு டோக்கன்களையே இ பாஸ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் எழுதிய கடிதத்தில், பத்திரப்பதிவுக்கு வழங்க படும் டோக்கன்களையே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ பாஸ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பத்திர பதிவு செய்யப்போகும் ஆவணங்களை அதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.