நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடலாம்.. பழைய கட்டணமே தொடரும்!

நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடலாம்.. பழைய கட்டணமே தொடரும்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, ஹோட்டல்களை திறக்க அனுமதி அளித்த அரசு மக்கள் கூட்டத்தை தவிர்க்க பார்சல்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்த நிலையில், நாளை முதல் ஹோட்டல்களில் மக்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடலாம்.. பழைய கட்டணமே தொடரும்!

ஹோட்டல்களின் வாசலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருக்க வேண்டும் என்றும் கிருமி நாசினி,சோப்பு உள்ளிட்டவை முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹோட்டல்களில் 50% இருக்கைகள் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ஏ.சி பயன்படுத்தக் கூடாது என்றும் ஒரு டேபிளுக்கும் மற்றொரு டேபிளுக்கும் 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடலாம்.. பழைய கட்டணமே தொடரும்!

அதே போல ஊழியர்கள் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும் எனவும், முடிந்த அளவு ஆன்லைன் பணபரிவர்த்தனை முறையை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.